Tuesday, 24 December 2013

NEW

  • PG PROMOTION Councelling held on Dec28, 2013 at all our CEO office through online.

  • New PG Recruitement appointment  will be contuct before Pongal.

  • New PG recruitment Tamil contuct certificate verification in Dec 30, 31

Monday, 23 December 2013

New Professional Tax Slap

New Professional Tax Slap


  • Rs 21001 to Rs 30000 - Rs 130

  • Rs 30001 to Rs 40000 - Rs 324

  • Rs 45001 to Rs 60000 - Rs 635

  • Rs 60001 to Rs 75000 - Rs 960

  • Rs 75000 to Above      - Rs 1270

Friday, 20 December 2013

ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு - கண்டன ஆர்ப்பாட்டம்

     குமரி மாவட்ட பள்ளிகளில் நடைபெற்று வரும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாள்களை, மாற்று பள்ளிகளில் கொடுத்து திருத்தும் அவல நிலையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று மாலை ஆர்ப்பட்டம் நடந்தது. நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
     ஆர்ப்பட்டத்தின் சாரம்சமாக  ஆசிரியர் இயக்கங்ளின் தலைவர்கள் பேசியதாவது....
* குமரி மாவட்டம் நடந்து முடிந்த பொது தேர்வில் தேர்ச்சி விழுக்காடு 10 ஆம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலாம் இடத்தினையும் , 12 ஆம் வகுப்பில் மாநிலத்தில் ஆறாம் இடத்தினையும் பிடித்து சாதனைப் படைத்திருக்கும் வேளையில் , இந்த செயலானது ஆசிரியர்களின் மனதினை வேதனைப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது.
* பாடம் எடுக்கும் ஆசிரியர்களே திருத்துகின்ற போது மாணவன் செய்யும் தவறைக் கண்டறிய இயலும், பொது தேர்விற்கு அவனது தவறுகளைச் சுட்டிக் காட்டி அதிக மதிப்பண்களை எடுக்க பயிற்சிகள் கொடுக்க இயலும்.
* ஆசிரியர்களின் தன்மதிப்பீட்டை அவமதிக்கும் செயலாக அமைந்துள்ளது.
* மக்கள் மத்தியில் ஆசிரியர்களின் தரத்தினையும் மதிப்பினையும் குறைக்கும் விதமாக இச்செயல் அமைந்துள்ளது.
* ஆசிரியர்களிடம் கலந்து பேசாது தன்னிச்சையாக எடுக்கப் பட்ட முடிவு ஆசிரியர்களை அவமதிப்பதாக அமைந்துள்ளது.