பணியிட நிர்ணய
விதிகளையும், மரபுகளையும், நடைமுறைகளையும் கவனத்தில் கொள்ளாமல் குமரி மாவட்டத்தில்
அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 1010 ஆசிரியர் பணியிடங்கள்
உபரி என அறிவிப்பு செய்யப்பட்டுள்ள செயலினை குமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு
வன்மையாகக் கண்டித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் 13.06-2014 முதல் 24-10-14 வரை நடத்தி வருகிறது.
இதில் நமது தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கலந்து கொண்டு
போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது. கழகத்தின் மாநில இணைச் செயலர் வேலவன், மாவட்டத்தலைவர்
முத்துசாமி, மாவட்ட செயலர் பென்னட் ஜோஸ், பொருளர் ஜார்ஜ், மாவட்ட இணைச் செயலர் விமல்
சங்கர், நாகர்கோவில் கல்வி மாவட்ட செயலர் அஜாஸ் என்று கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
தினம் இருவர் வீதம் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment