Saturday, 27 July 2013

பள்ளிக் கல்வித்துறையில், 45 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றுள்ளனர் அதுபோல், மாவட்ட கல்வி அலுவலர்களாக உள்ள, 16 பேர், முதன்மை கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றனர்.

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு ஊதிய உயர்வு


                                அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு  தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு ( 3% + 3%) 01.01.2006 தேதி முதல் நடைமுறைப்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணப்பலன் 01.04.2013 முதல் வழங்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Sunday, 14 July 2013

முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாற்றம்

           
       முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாற்றம்

               முதன்மை கல்வி அலுவலர்கள், ஐந்து பேர், மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சி.இ.ஓ., செல்வகுமார், விருதுநகர் மாவட்ட சி.இ.ஓ.,வாக (ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ.,) மாற்றப்பட்டுள்ளார்.

                    தனி சி.இ.ஓ., ராமசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., மகேஸ்வரி, அதே மாவட்டத்தில், ரெகுலர் சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

             டி.ஆர்.பி.,யில், துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த பூபதி, திருச்சி மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட சி.இ.ஓ., சுகன்யா மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர், இணை இயக்குனர் பதவி உயர்வு பட்டியலில் உள்ளார்.
                                                                                                         

Tuesday, 9 July 2013

FLASH NEWS

< RMSA 4 நாட்கள் பயிற்சி வகுப்புகள், நாகர்கோவில் கல்விமாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு கவிமணி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மீனாட்சிபுரம் உயர்நிலைப்பள்ளியிலும், தக்கலை கல்விமாவட்டத்தில் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காட்டாத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், குழித்துறை கல்விமாவட்டத்தில் மார்த்தாண்டம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது.

Saturday, 6 July 2013

RMSA 4 நாள் பயிற்சி வகுப்புகள்

RMSA  4 நாள் பயிற்சி வகுப்புகள், நாகர்கோவில் கவிமணி மேல்நிலைப்பள்ளி, தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்ப்டுகிறது.