முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாற்றம்
முதன்மை கல்வி அலுவலர்கள், ஐந்து பேர், மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சி.இ.ஓ., செல்வகுமார், விருதுநகர் மாவட்ட சி.இ.ஓ.,வாக (ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ.,) மாற்றப்பட்டுள்ளார்.
தனி சி.இ.ஓ., ராமசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., மகேஸ்வரி, அதே மாவட்டத்தில், ரெகுலர் சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஆர்.பி.,யில், துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த பூபதி, திருச்சி மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட சி.இ.ஓ., சுகன்யா மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர், இணை இயக்குனர் பதவி உயர்வு பட்டியலில் உள்ளார்.
No comments:
Post a Comment